search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிலிந்த் ராவ்"

    • இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'தி வில்லேஜ்'.
    • கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வந்தது.

    நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'தி வில்லேஜ்'. ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த வெப்தொடரில் திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இந்த வெப்தொடர் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது. ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்த வெப்தொடருக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்த வெப்தொடர் நவம்பர் 24-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசியதாவது, "மிலிந்த் இந்தக்கதையை சொன்ன போது, இதை எடுக்க முடியுமா ? என்று தான் முதலில் கேட்டேன். அவர் எழுதியது மிகப்பெரிய விஷிவல், படத்தை விட பெரிய பட்ஜெட், இதை எல்லாம் இங்கு எடுக்க முடியுமா? சொல்வதில் 80 சதவீதம் எடுத்தாலே போதும் என்று சொன்னேன். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை பிரைமில் ஒகே செய்தார்கள். மிலிந்த் சொன்ன மாதிரி எடுத்து விட்டார் அதுவே மகிழ்ச்சி. மிலிந்த் ஈஸியாக எந்த ஒரு காட்சிக்கும் ஒகே சொல்ல மாட்டார். இதை எடுப்பது மிகக்கடினம். பிராஸ்தடிக் மேக்கப், ஷீட்டிங் லோகேஷன் என எல்லாமே மிக கடினமாக இருந்தது.


    3 வருட நீண்ட பயணம். இதை எடுத்து முடித்ததற்கே மிகப்பெரிய பார்டி வைக்க வேண்டும். அவ்வளவு கஷ்டபட்டிருக்கிறோம். மேலும் இது எனக்கு புது எக்ஸ்பீரியன்சாக இருந்தது. இவ்வளவு கோரியான ஹாரர் கதை நடித்ததே இல்லை. இது முழுக்க முழுக்க வித்தியாசமான கான்செப்ட், அதை நம்பித்தான் நான் வேலை செய்தேன். நரேன் சார் அவருடன் சேர்ந்து என் குழந்தையையும், மனைவியையும் தேடுவது தான் கதை. ஆனால் நிறைய சப் பிளாட் இருக்கும். ஒவ்வொரு எபிசோடும் நீங்கள் அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதிரி கதையில் விஷுவல் மற்றும் சவுண்ட் ரொம்ப முக்கியம், அதை மிலிந்த் கொண்டு வந்திருக்கிறார். விஷுவல் எபெஃக்ட்ஸ் எல்லாம் முடித்து உங்கள் முன் கொண்டு வர இவ்வளவு காலம் தேவைப்பட்டது. இப்போது பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் நன்றி" என்று பேசினார்.




    ×